Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மியான்மரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக புத்தமத துறவிகளால் நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும், அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக அரியலூர் மாவட்ட பொருளாளர் கமாலுதீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் மன்சூர் அலி ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்தார். சலீம், ரஷீத், ஷேக், கலிஃபுல்லா, ஆரிஃப், அபுபக்கர், லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஷாகும் ஹமீது நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai