Enable Javscript for better performance
தேசிய பசுமைப்படை சார்பில் உலக சூற்றுச்சூழல் தினம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய பசுமைப்படை சார்பில் உலக சூற்றுச்சூழல் தினம்

    By அரியலூர்,  |   Published on : 06th June 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை மற்றும் சூற்றுச்சூழல் மன்றங்களின் சார்பில், சுற்றுச்சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியை முன்னிட்டு, எழுநூறுகோடி கனவுகள் - ஒரே ஒரு பூமி - அதை கவனமாக பயன்படுத்துவோம் (நங்ஸ்ங்ய் ஆண்ப்ப்ண்ர்ய் ஈழ்ங்ஹம்ள் ஞய்ங் டப்ஹய்ங்ற் இர்ய்ள்ன்ம்ங் ரண்ற்ட் இஹழ்ங்) என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் செயல்திட்ட குழுவின் மையக் கருத்தை வலியுறுத்தி, அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம், மரம் நடுவோம், மழை பெறுவோம், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பள்ளியில் இருந்து புறப்பட்டு அண்ணாநகர், கல்லூரி சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

    முன்னதாக பேரணியை, மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் அல்லி, சி. ராஜேந்திரன் சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. அறிவழகன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

    பசுமைப்படை ஆசிரியர் ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai