Enable Javscript for better performance
மின்னல் தாக்கி பலியான மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    மின்னல் தாக்கி பலியான மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி

    By அரியலூர்,  |   Published on : 06th June 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே மின்னல் தாக்கி பலியான மூதாட்டியின் குடும்பத்துக்கு ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலையை அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி வெள்ளிக்கிழமை வழங்கினார்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கோவிந்தம்மாள்(75). இவர் கடந்த மே 27-ம் தேதி மின்னல் தாக்கி புளியமரம் விழுந்ததில் உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் இயற்கை இடர்பாடுகள் நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி பலியான கோவிந்தம்மாளின் மகன் பாலமுருகனிடம் ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    இதில் அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

    தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai