Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் இன்று விலையில்லா பொருள்கள் வழங்கல் - Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் இன்று விலையில்லா பொருள்கள் வழங்கல்

    By dn  |   Published on : 07th June 2015 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சிகளில் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் பெரிய கிருஷ்ணாபுரம், ஜயங்கொண்டம் ஒன்றியத்தில்  தத்தனூர் (மே), அரியலூர் ஒன்றியத்தில் ஓட்டக்கோயில், பூண்டி

    ஆகிய ஊராட்சிகளில் விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.  மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ் தலைமையில்

    நடைபெறும் விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்

    துரை. மணிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai