Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மொபட் மீது பின்னால் வந்த பைக் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள சுண்டிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சுமதி(40). இவர், சனிக்கிழமை தனது உறவினர்

    கோவிந்தசாமி என்பவரின் மகன் தவசாமி (48) மொபட் ஓட்டிவர சென்னை - கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, முகமதுஹனிபா மகன் பயாஸ்முகமது(20) ஓட்டி வந்த பைக், மொபட்டின் பின்புறம் மோதியதில் சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில்

    காயமடைந்த தவசாமி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து

    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai