Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே முதியவர் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆவேரிக்கரை மேட்டில் ஞாயிற்றுக்கிழமை  அடையாளம் தெரியாத முதியவர் சடலம் கிடப்பது தெரியவந்தது.

    தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,

    சடலத்தின் அருகே இருந்த பையிலிருந்து அவர் சிகிச்சை பெற்று வந்த மருந்துச்சீட்டு கண்டெடுக்கப்பட்டது. 

    மேலும், விசாரித்ததில் இறந்தவர் காட்டாத்தூர்

    கிராமத்தைச் சேர்ந்த தருமன் மகன் பெருமாள் (70) என்பதும் அவர் கும்பகோணத்திற்கு சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து

    போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai