"வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிடில் உரிமம் ரத்து'
By dn | Published on : 07th June 2015 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளில் உள்ள வங்கிகள், தங்க நகை மற்றும் அடகுக் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிடில் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார் ஜயங்கொண்டம் காவல் கண்காணிப்பாளர் இன்கோ திவ்யன்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:
இப்பகுதிகளில் உள்ள நகைக்கடை, அடகுக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு கண்காணிப்பு கேமரா,
அலாரம் ஆகியவைகளை அவசியம் பொருத்த வேண்டும். மேலும், இரவுக் காவலர் நியமிக்க வேண்டும். எனவே, நகைக்கடை, அடகுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா
பொருத்தாவிட்டால், வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார்.