Enable Javscript for better performance
வாலாஜா நகரில் மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரில் மாவட்ட இளைஞரணி சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் 92-ஆவது பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலர் சுபா. சந்திரசேகரன் மரக்கன்றுகள் நட்டு வைத்து விழாவைத் தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் சந்திரசேகர், ஒன்றியச் செயலர் ஜோதிவேல், நகரச் செயலர் முருகேசன், ஒன்றியப் பொருளாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai