Enable Javscript for better performance
தூக்கில் தொங்கிய நிலையில் வழக்குரைஞர் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தூக்கில் தொங்கிய நிலையில் வழக்குரைஞர் சடலம் மீட்பு

    By ஜயங்கொண்டம்  |   Published on : 08th June 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே முந்திரி காட்டில் இளம் வழக்குரைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள மேலநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் வழக்குரைஞர் ராஜசேகர் (29). கடந்த வியாழக்கிழமை வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லையாம்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின் முந்திரி தோப்பில் ராஜசேகரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.இதுகுறித்து அவரது தந்தை சாமிதுரை அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai