Enable Javscript for better performance
10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் - Dinamani

சுடச்சுட

    

    10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

    By அரியலூர்,  |   Published on : 08th June 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள், சிறப்புத் துணைத் தேர்வுக்கு ஜூன் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் (செவ்வாய், புதன் கிழமை) தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

    அரியலூர் மாவட்ட கல்வித்துறை மூலம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தேர்வுக்கான கடைசித் தேதி முடிந்தும் இதுவரையில் விண்ணப்பிக்காதவர்கள், தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கல்வித்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai