Enable Javscript for better performance
5,938 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    5,938 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்

    By அரியலூர்,  |   Published on : 08th June 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தின் கீழ் வரும் 4 ஊராட்சிகளில் மொத்தம் உள்ள 5,938 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபாலன், சிறப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தமிழ்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம். சந்திரகாசி, எம்.எல்.ஏ. துரை. மணிவேல் ஆகியோர் பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கி சிறப்புரையாற்றினர். இதில், ஆண்டிமடம் ஒன்றிய பெரியகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 1,463 பயனாளிகளுக்கும், ஜயங்கொண்டம் ஒன்றிய தத்தனூர் (மேற்கு) ஊராட்சியில் 1,700 பயனாளிகளுக்கும், அரியலூர் ஒன்றிய ஓட்டக்கோயில் ஊராட்சியில் 1,451 பயனாளிகளுக்கும், திருமானூர் ஒன்றிய பூண்டி ஊராட்சியில் 1,324 பயனாளிகளுக்கும் என மொத்தம் 5,938 பயனாளிகளுக்கு விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டது.

    விழாவில், அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமரை ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் சுகுணா தவச்செல்வன் (ஆண்டிமடம்), கண்ணகி குப்புசாமி (ஜயங்கொண்டம்), கவிதா (அரியலூர்), சீனிவாசன் (திருமானூர்), ஊராட்சி தலைவர்கள் ஒட்டக்கோவில் கோவிந்தராஜ், பூண்டி நெப்போலியன், லூர்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன் வரவேற்றார். ஜயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai