Enable Javscript for better performance
கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

    By அரியலூர்  |   Published on : 09th June 2015 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி, திருமானூர் ஒன்றிய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் அரியலூர் அண்ணா சிலை எதிரே ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

    பெரியமறை தருமன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் ஜெயராஜ், திருமானூர் ஒன்றியச் செயலர் ஆறுமுகம், அரியலூர் பகுதிச் செயலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் உலகநாதன், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில், கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதி பெற்றுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாட்டுவண்டியில் மணல் அள்ள பொதுப்பணித் துறையின் அனுமதி

    மறுக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, ஊர்வலமாக சென்ற சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரனிடம் மனுவை அளித்தனர்.

    இதில், திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த பெரிமறை, வெற்றியூர், சுள்ளங்குடி, வடுகபாளையம், குருவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதி மாட்டுவண்டி தொழிலாளர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai