Enable Javscript for better performance
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    செந்துறை அருகேயுள்ள வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பிரேமாவை. அதே கிராமத்தை சேர்ந்த அப்பாதுரை மகன் செந்தில் (30), தகாத வார்த்தைகளால் திட்டினாராம். இதையறிந்த அவரது தோழி ராஜா மனைவி சங்கீதா (29) செந்திலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

    இதனால், சங்கீதாவுக்கும், செந்திலுக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை சங்கீதா நடந்து சென்றபோது அவரை வழிமறித்த செந்தில் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் சங்கீதா அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai