Enable Javscript for better performance
வழக்குரைஞர் மர்மச் சாவு: 3 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர் மர்மச் சாவு: 3 பேர் மீது வழக்குப் பதிவு

    By அரியலூர்  |   Published on : 09th June 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வழக்குரைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, 3 பேர் மீது ஆண்டிமடம் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

    ஆண்டிமடம் அருகேயுள்ள மேலநெடுவாளிணி கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மகன் ராஜசேகர் (29), வழக்குரைஞர். இவர், கடந்த 7 ஆம் தேதி

    மேலநெடுவாளிணி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிக்கு சொந்தமான முந்திரித் தோப்பில் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே, ராஜசேகரின் தந்தை சாமிதுரை ஆண்டிமடம் காவல் நிலையைத்தில் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பாக 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, ஆண்டிமடத்தை சேர்ந்த ராஜா, மேலநெடுவாளிணி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், செல்லதுரை ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் ஆய்வாளர் (பொ) தென்னரசன்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai