Enable Javscript for better performance
வி. கைகாட்டியில் புறக்காவல் நிலையத்துக்கு பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    வி. கைகாட்டியில் புறக்காவல் நிலையத்துக்கு பூமிபூஜை

    By அரியலூர்  |   Published on : 09th June 2015 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகேயுள்ள வி.கைகாட்டியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வி.கைகாட்டி பகுதியில் சிமெண்ட் ஆலை, வணிக நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, வி.கைகாட்டி 4 வழிச்சாலையில் மாநில நெடுஞ்சாலை துறையின் ஒப்புதல் பெறப்பட்டு அல்ட்ரா டெக் நிறுவனத்தின் மூலம் ரூ. 6.20 லட்சத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பூமிபூஜையை தொடக்கி வைத்தார்.

    ஆலைத் தலைவர் கணேசன், ஊராட்சித் தலைவர் ராமநாதன், துணைக் கண்காணிப்பாளர்கள் கணேசன் (அரியலூர்), இனிக்கோ திவ்யன் (ஜயங்கொண்டம்) உள்பட காவலர்கள் பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai