Enable Javscript for better performance
அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில் தீ விபத்து: பொருள்கள் நாசம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில் தீ விபத்து: பொருள்கள் நாசம்

    By dn  |   Published on : 10th June 2015 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குடியிருப்பு வளாகம் அருகே அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை மாலை மின் கசிவால் அறை எண் 2-ல் இருந்த ஏ.சி. இயந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் வரவேற்பு அறையில் இருந்த பர்னிச்சர் பொருள்கள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த அரியலூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் ரூ. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அரியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai