Enable Javscript for better performance
ரூ. 10 கோடியில் சுண்டக்குடி மருதையாற்றில் பாலம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 10 கோடியில் கட்டப்பட்ட சுண்டக்குடி மருதையாற்று பாலத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், சுண்டக்குடியில் மருதையாற்றின் குறுக்கே ரூ. 10 கோடியில் உயர்நிலை பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செலயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து, திறக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ் கூறியது:

    200 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலம் 53 ஆயிரம் கன அடி நீர் வடிவதற்கு ஏற்ற வகையிலும், மழை காலங்களில் மருதையாற்றில் ஏற்படும் வெள்ளத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 45க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைப்பதற்கும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியின்போது, சிதம்பரம் தொகுதி மக்களமை உறுப்பினர் மா. சந்திரகாசி, அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அன்பழகன், ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai