Enable Javscript for better performance
ரேஷன் அரிசி மூட்டைகள் திருட்டு: லாரி ஓட்டுநர் உள்பட மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் அரிசி மூட்டைகள் திருட்டு: லாரி ஓட்டுநர் உள்பட மூவர் கைது

    By dn  |   Published on : 10th June 2015 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளைத் திருடியதாக லாரி ஓட்டுநர் உள்பட மூன்று பேர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

    ஜயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிடங்கில் இருந்து உல்லியகுடி, அம்பாபூர், கீழநத்தம், செங்குழி, சூரியமணல் ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு 19 டன் அரிசி மூட்டைகள் திங்கள்கிழமை மாலை ஒரு லாரியில் அனுப்பிவைக்கப்பட்டன.

    ஆனால், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் இரவு நேரத்தில் அரிசி மூட்டைகளை இறக்க மறுத்துவிட்டதால், சூரியமணல் கிராமத்தில் உள்ள கடையில் 65 மூட்டைகள் மட்டும் இறக்கிவிட்டு, லாரியை ஓட்டுநர் ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

    அப்போது சுமை ஆட்கள் பழனிவேல் மகன் வீராசாமி(46), பொன்மணி மகன் செல்வம் (39) ஆகியோர் லாரியில் இருந்த 8 மூட்டை அரிசியை திருடிச் சென்றுள்ளனனர்.

    ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளர் சுகுமாறன் தலைமையிலான போலீஸார் அவர்களை நிறுத்தி, விசாரித்தபோது லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை திடுடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வம், வீராசாமி மற்றும் லாரி ஓட்டுநரான ஜயங்கொண்டத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சங்கர் (58) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai