Enable Javscript for better performance
அரசு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    By அரியலூர்,  |   Published on : 11th June 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு 32 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ ஆகிய தொழில் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள்.

    அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். மேலும், 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2 செட் பாலியெஸ்டர் காட்டன் சீருடைகளும், 10, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுருக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேர பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமலும், வீட்டுக்கும் கல்வி நிலையத்துக்கும் குறைந்தபட்சம் 8 கீ.மீ மேல் இருக்க வேண்டும்.

    இது மாணவிகளுக்கு பொருந்தாது.

    தகுதியுடைய மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்று, நிறைவு செய்து பள்ளி மாணவர்கள் ஜூன் 25 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி

    மாணவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai