Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

    By அரியலூர்  |   Published on : 11th June 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், கிராமம்தோறும் வட்டாட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் வட்டம் கீழையூர், செந்துறை வட்டம் அசாவீரன் குடிகாடு, உடையார்பாளையம் வட்டம், குண்டவெளி (கி) ஆகிய கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் ஆகியவற்றுக்காக பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்படும். எனவே, சம்பந்தப்பட்ட கிராம மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai