Enable Javscript for better performance
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் 179 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் 179 பேர் கைது

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 11th June 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பள்ளிவாசலில் தனிநபர் ஆதிக்கத்தை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் 179 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கோட்டை ஜும்ஆ பள்ளிவாசலில் தனிநபரின் ஆதிக்கத்தை கண்டித்தும், இந்தப் பிரச்னையில் வஃப்பு வாரியம் தலையிட்டு பள்ளிவாசல் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கக் கோரியும், கோட்டை பள்ளிவாசலை தொழுகைக்காக திறந்துவிட கோரியும், தேர்தல் நடத்தும்வரை கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தாற்காலிகமாக தொழுகைக்கு ஏற்பாடு செய்யக் கோரியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட பொருளாளர் கமாலுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை நிலைய பேச்சாளர்கள் பழனி பாரூக், அபுல்பாசல், திருச்சி ரபீக், மாவட்ட நிர்வாகிகள் மன்சூர் அலி, சாகுல்ஹமீது, ஷேக்இப்ராகிம், சவுக்கத்அலி, ஆசிக்நூர், ஹபிபுல்லாஹ் உள்ளிட்டோர் பள்ளிவாசல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் (பொ) குணசேகரன், உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 179 பேரை கைதுசெய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai