Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல்தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல்தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

    By அரியலூர்  |   Published on : 11th June 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    ஆண்டிமடம் அருகேயுள்ள ஆரோக்யபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூக்காஸ் மகன் வல்லபதாஸ் (65). இவர், கடந்த 26.6.

    2014-ல் வரதராஜன்பேட்டையில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது, வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிந்த ஆய்வாளர் கவிதா வல்லபதாûஸ கைது செய்து விசாரணை மேற்கொண்டார்.

    இந்த வழக்கு, அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வல்லபதாஸýக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai