அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
By அரியலூர் | Published on : 12th June 2015 03:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களை வியாழக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மருதூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் (20),ராஜா ராமன் (32), குருவாடியைச் சேர்ந்த முத்துராஜா (22) ஆகியோர் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வயலில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தூத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன், அவர்கள் மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன், 2 டிராக்டர்களைப் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.