Enable Javscript for better performance
தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்று நடும் விழா

    By அரியலூர்,  |   Published on : 12th June 2015 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்களின் சார்பில் மரம் நடும் விழா மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

    இவ்விழாவில், சூற்றுச்சூழல் துறையின் "மரம் நடுவோம், மழை பெறுவோம்', "சுற்றுச்சூழலைக் காப்போம்' என்ற நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் பள்ளி வளாகத்தில் டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாக இயக்குநர் ஆர். ஏ. கிருஷ்ண குமார், முதுநிலை மேலாளர் பி. சிவகுமார் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர். மேலும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவதை வலியுறுத்தி இலவசப் புத்தக துணிப்பைகளை தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மு. அறிவழகன், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அல்லி ஆகியோர் வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai