Enable Javscript for better performance
பள்ளி மாணவி மாயம்: தந்தை போலீஸில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகே பள்ளி மாணவியைக் காணவில்லை என்று அம்மாணவியின் தந்தை போலீஸில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த மயிலைப்புள்ளைச் சாவடியைச் சேர்ந்த சம்மனசு என்பவரின் மகள் ஜெனிலா (15). இவர், பெரியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஜெனிலாவின் பெற்றோர் அவரை வேறு பள்ளியில் சேர்ப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், ஜெனிலா இதற்கு ஒப்புக்கொள்ளாமல் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி பள்ளி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அம்மாணவியின் தந்தை சம்மனசு, தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai