Enable Javscript for better performance
பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை- Dinamani

சுடச்சுட

    

    பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை

    By அரியலூர்  |   Published on : 12th June 2015 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையின பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம்பாட்சா.

    அரியலூரில், வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் கூறியது: மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியால் சிறுபான்மையின மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அமைப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புகளால் பாஜகவிற்கு எதிராக போராடக்கூடிய வலிமை இல்லை.

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவை பா.ஜ.க. உறுப்பினர் சிறுபான்மையின மக்களை இழிவாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், பாஜக மக்களவை உறுப்பினர்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பேசுவதையும், செயல்படுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்நடவடிக்கைகளால் பாஜகவின் செல்வாக்கு அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்றார்.

    முன்னதாக, நடைபெற்ற மாவட்ட கூட்டத்துக்கு அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மத்திய அரசு நிலம் கையகச் சட்டத்தைக் கைவிட வேண்டும், ஜயங்கொண்டத்தில் அனல் மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. தலைவர் தமிழ்மணி, உயர்மட்டக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், முன்னாள் மாவட்டத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai