Enable Javscript for better performance
மத்திய அரசுக்கு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் நன்றி- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசுக்கு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் நன்றி

    By அரியலூர்,  |   Published on : 12th June 2015 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க முன்வந்துள்ள மத்திய அரசுக்கு கோத்தாரி சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

    அரியலூரில் இச்சங்கத்தின் கூட்டம் தலைவர் வாரணவாசி ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 1000 கோடி உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் கொண்டு சென்றது. அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 6000 கோடி வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்துள்ளதையடுத்து

    இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (சிப்பா) சார்பில் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இக்கூட்டத்தில்,சிப்பா அமைப்பின் சார்பில், மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகிகள் கண்ணதாசன்,விஜயகுமார், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai