Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி சாவு

    By அரியலூர்  |   Published on : 12th June 2015 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் நகர்ப்பகுதிக்கு, திருமானூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில், முடிகொண்டான் பகுதியில் உள்ள வயல்பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்துள்ளது. இதைக் கண்ட கிராம மக்கள் மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி குலமாணிக்கத்தைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் மின்கம்பத்தில் ஏறி மின்சார வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அவர் கீழே இறங்கி விட்டார் எனக் கருதி மின்சார இணைப்பை கொடுத்துள்ளனர். இதில், மின்சாரம் பாய்ந்து சேகர் மின்கம்பத்திலேயே கருகி இறந்தார்.

    இதுகுறித்து, திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai