"37,720 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக்கழிவறை
By 'அரியலூர், | Published on : 12th June 2015 03:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் 37,720 பயனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கொளத்தூர் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டப் பயனாளிகள் 149 பேருக்கு பணி ஆணைகளை வியாழக்கிழமை வழங்கி அவர் மேலும் பேசியது:
அரியலூர் மாவட்டத்தில் தமிழக முதல் அமைச்சரின் உத்தரவுப்படி, மொத்தம் 37,720 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. 12,000 மதிப்பில் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டித்தரப்படுகிறது. மேலும், கீழக்கொளத்தூர் ஊராட்சியில் 149 பயனாளிகளுக்கு இன்று பணி தொடங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.ராஜேந்திரன், சோ. சித்ரா, ஊராட்சித் தலைவர் கே. மோகன், வட்டாட்சியர் ச. வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.