Enable Javscript for better performance
அரியலூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு

    By அரியலூர்,  |   Published on : 13th June 2015 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் வசிப்பவர் டைலர் மூர்த்தி (35). இவரது மகள் யோகேஸ்வரி (7) (படம்).அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு யோகேஸ்வரிக்கு அடிக்கடி வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதால் யோகேஸ்வரியை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, யோகேஸ்வரியை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வரும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து யோகேஸ்வரியின் தந்தை மூர்த்தியிடம் கேட்டபோது, என் மகளுக்கு கடந்த சில தினங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தது. பின்னர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குள் காய்ச்சல் மற்றும் வலிப்பு அதிகமாக இருந்ததால் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரை செய்தனர்.

    நாங்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு எனது மகளை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதால் காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்தனர். பின்னர், யோகேஸ்வரி இறந்து விட்டார்.

    எங்கள் பகுதியில் அதிகளவில் குப்பைகளும், பன்றிகளும் இருப்பதால்தான் எனது மகளுக்கு இந்நோய் ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai