Enable Javscript for better performance
குற்றம்சாட்டப்பட்டவர் மீதான ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    குற்றம்சாட்டப்பட்டவர் மீதான ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்

    By அரியலூர்  |   Published on : 13th June 2015 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சாந்தகுமாரி என்பவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த 50- க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்கிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த புகாரில், சென்னையைச் சேர்ந்த சாந்தகுமாரி, நந்தினி, ஜமுனாராணி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சார்லஸ் ஆகிய 4 பேரும் பெண்கள் சமுதாய முன்னேற்றத்துக்காக ஆட்வின் பெண்கள் நல்வாழ்வு மற்றும் சமூக அமைப்ப நடத்தி வருவதாகவும், இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தால் வங்கி கடனுதவியாக ரூ. 50 ஆயிரத்தை ஒவ்வொருவருக்கும் பெற்றுத் தருவதாக அரியலூர் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கூறினர். இதனை நம்பி அரியலூர் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 11 ஆயிரம் பெண்கள் உறுப்பினர் கட்டணமாக தலா ரூ. 250 வீதம் வசூலித்து ரூ. 27 லட்சத்தை வங்கிக் கணக்கிலும், ரொக்கமாகவும் செலுத்தினோம்.

    இந்நிலையில், வங்கி கடனுதவி கேட்டு அணுகினால் எங்களை மிரட்டுவதோடு எங்களிடம் வசூலித்த பணத்தை தர மறுக்கின்றனர்.

    எனவே, சாந்தகுமாரி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்வதோடு, ரூ. 27 லட்சத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

    இந்த மனு மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்டக் குற்றப்பிரிவு பிரபுதாஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆதாரங்கள் ஏதும் இருந்தால் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் செயல்படும் குற்றப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai