Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, மனிதச் சங்கிலி

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 13th June 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தேவமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, ஜயங்கொண்டம் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மதலைராஜ் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் த. ஹேமலதா முன்னிலை வகித்தார்.

    பேரணி மற்றும் மனிதச் சங்கிலியை மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், ஊராட்சிமன்றத் தலைவர் அமுலு, துணைத் தலைவர் சுகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழமலை ஆகியோர் பேசினர். பேரணி, பள்ளியில் இருந்து புறப்பட்டு கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை இரா. வெற்றிச்செல்வி வரவேற்றார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் இலா. செங்குட்டுவன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai