Enable Javscript for better performance
ஜயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

    By அரியலூர்,  |   Published on : 13th June 2015 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் ஜயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை தொழிலாளர் ஆணையர் ப. அமுதா உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் தொழிலாளர் ஆய்வாளர் ஜே.ஏ. முகமதுயூசுப், முத்திரை ஆய்வாளர் வெங்கடேசன், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் சேதுமாதவன், டாக்டர் கே. தீபா, ஓசை தொண்டு நிறுவன காளிதாசன் உள்ளிட்ட குழுவினர் ஜயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், சுவீட் ஸ்டால்கள், ஜவுளிக் கடைகள் மளிகைக் கடைகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 14 வயதுக்குள்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமியர் கண்டறியப்பட்டனர். அவர்களை பள்ளியில் சேர்க்க கல்வித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆய்வின்போது, குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஒட்டப்பட்டது. சிறுவர்களை எந்த காரணத்தைக் கொண்டும், எந்த வேலையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

    மேலும் சிறுவர், சிறுமிகளை பணிக்கமர்த்தினால் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஆய்வின்போது, ரீடு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சித்திரக்கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் ஜெயந்தி, அனைவருக்கும் கல்வி திட்ட ஜயங்கொண்டம் மேற்பார்வையாளர் பாலாஜி, ஆசிரியர் பயிற்றுநர்கள் வெங்கடேசன், பாலமுருகன், அந்தோனி லூர்து சேவியர், அன்பரசன், உத்திராபதி உள்ளிட்டோர் உடனிருதந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai