Enable Javscript for better performance
பசுமை வீடுகள் கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் ஊராட்சியில் பசுமை வீடுகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அரியலூர் ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இலுப்பையூர் ஊராட்சி, பொய்யாதநல்லூர் கிராமத்தில் முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அன்பரசி, சந்திரா, சுதா ஆகிய 3 பயனாளிகளுக்கும், இலுப்பையூர் கிராமத்தில் விசாலாட்சி ராமசாமி, சரோஜா சுப்பிரமணியன், வசந்தி அண்ணாமலை, இந்திரா முருகேசன், அழகம்பாள் செல்லமுத்து ஆகிய 5 பயனாளிகளுக்கும் தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் இலுப்பையூர் கிராமத்தில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.20 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆட்சியர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், 2015-16 ஆம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் இலுப்பையூரில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் நடைபெறுவதையும், ரூ. 3.20 லட்சம் மதிப்பில் இலுப்பையூர் மயானத்தில் குடிநீர் கைப்பம்பு அமைக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ். கங்காதாரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கபிலன், சேகர், வட்டாட்சியர் வைத்தியநாதன், பணி மேற்பார்வையாளர் தமிழ்மணி, உதவிப்பொறியாளர் காமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai