Enable Javscript for better performance
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரியலூரில் ஐஜேகே ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரியலூரில் ஐஜேகே ஆர்ப்பாட்டம்

    By அரியலூர்,  |   Published on : 13th June 2015 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, அரியலூரில் ஐஜேகே கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து பேசியது:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. குடிப்பழக்கத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தாலிக்குத் தங்கம் வழங்குவதாகக் கூறும் தமிழக அரசு, பல பெண்களின் தாலிக்கு வேட்டு வைக்கும் டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயகக் கட்சி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மது விலக்கை அமல்படுத்தும் வரை தொடர்ந்து எங்கள் கட்சி குரல் கொடுக்கும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் அருள்கணேசன், ஒன்றியத் தலைவர்கள் கோவிந்தராஜ் (அரியலூர்), சுந்தர்ராஜ் (செந்துறை), இளைஞர் அணி பாலச்சந்திரன், மகளிர் அணி பச்சையம்மாள், மாலதி, கலா, மாவட்ட செய்தி தொடர்பாளர் அழகுசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai