Enable Javscript for better performance
வாணதிரையன்பட்டினம் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வாணதிரையன்பட்டினம் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்

    By அரியலூர்  |   Published on : 13th June 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால், பொதுமக்கள் வாணதிரையன்பட்டினம் ஊராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒன்றியத்தைச் சேர்ந்த வாணதிரையன்பட்டினம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்நிலையில், அந்த ஊராட்சியின் 3-வது வார்டு பொதுமக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றியதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த 3-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் 50 பேர் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் வாணதிரையன்பட்டினம் ஊராட்சி அலுவலகத்துக்கு, ஊராட்சி உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஊராட்சித் தலைவர் இளமதி, ஊராட்சிச் செயலர் பன்னீர்செல்வம், உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

    இதையடுத்து, ஜயங்கொண்டம் ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்ளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai