Enable Javscript for better performance
அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடியில் இருந்து  வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து அரியலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் சென்று பேருந்து நின்றதாம்.

    இதனால் ஆத்திரமடைந்த நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராஜீவ் காந்தி, பேருந்து ஓட்டுநர் விஜயகுமாரிடம் (40) தகராறு செய்து தாக்கினாராம். இதுகுறித்து, விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை வழக்குப் பதிந்து ராஜீவ்காந்தியை கைதுசெய்து விசாரிக்கின்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai