Enable Javscript for better performance
அரியலூர் அருகே சாலை விபத்தில் முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள இடையக்குறிச்சியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (35). நாளிதழ் நிருபர். இவர் சனிக்கிழமை தனது பணியை முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் அரியலூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். உடன், அயன்ஆத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொன்னுசாமி (60) என்பவர் பின்சீட்டில் அமர்ந்து சென்றுள்ளார்.

    இந்நிலையில், அமீனாபாத் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், பொன்னுசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். மேலும், காயமடைந்த அய்யப்பன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து, அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் கடலூர் மாவட்டம், அகரம்

    சோழகரத்தைச் சேர்ந்த ஆனந்த வேலு(30) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai