Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில்  வேளாண் சேவை மையங்கள் மூலம் இயந்திரங்கள் வாடகைக்கு பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில்  வேளாண் சேவை மையங்கள் மூலம் இயந்திரங்கள் வாடகைக்கு பெறலாம்

    By dn  |   Published on : 14th June 2015 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் வேளாண் சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை வாடகைக்குப் பெறலாம் என்றார் அரியலூர் மண்டல இணைப் பதிவாளர் எஸ். பாபு.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் வேளாண் சேவை மையங்களின் மூலம் வேளாண்மை இயந்திரங்களான  டிராக்டர், பவர் டில்லர், ஆகியவை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.

    டிராக்டர் 1 மணி நேரத்துக்கு கொக்கி கலப்பை, ரொட்டவேட்டர் ஆகியவைகளுக்கு ரூ. 500 எனவும், சட்டி கலப்பைக்கு ரூ. 450 எனவும் மற்றும் பவர் டில்லர் 1 மணி நேரத்துக்கு ரூ.300 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai