Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

    By dn  |   Published on : 14th June 2015 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாளையொட்டி(ஜூóன் 12), அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் பேருந்து நிலையத்தில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட "மனிதச் சங்கிலி' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மேலும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். பின்னர், ஆட்சியர் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் பூங்குழலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், குழந்தைகள் நலக்குழு தலைவர் பாஸ்கரன், கல்வித்துறை துணை ஆய்வாளர் பழனிச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், தொழிலாளர் துணை ஆய்வாளர்

    சேதுமாதவன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai