Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டம்  பொய்யாதநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம்  பொய்யாதநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

    Published on : 14th June 2015 11:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடத்தை முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.

    இம்மையத்தில் மருந்தகம், ஊசி இடுமிடம், கணினி அறை, பிரசவ அறை, ஆய்வகம் ஆகியவற்றிற்கு தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ். கங்காதாரணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சேரன்,  வட்டார மருத்துவ அலுவலர் கஸ்தூரிபாய், மருத்துவ அலுவலர் மகாலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai