Enable Javscript for better performance
உலகச் சுற்றுச்சூழல் தினம்: கீழப்பழூவூர் பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    உலகச் சுற்றுச்சூழல் தினம்: கீழப்பழூவூர் பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

    By dn  |   Published on : 14th June 2015 11:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சார்பில்,உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் கீழப்பழூவூர் புதிய பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடும்

    விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ். நவாப் ஜான், மாவட்ட வனச்சரக அதிகாரி சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இதில், செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் தலைவர் ம. சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் (சுரங்கம்) ஜி. ரகுநாத் சிங், முதுநிலை பொதுமேலாளர் (மனித வளம்) அ. அழகர்சாமி, ஆலைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், சிகப்பி ஆச்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது

    மக்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

    சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு   நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai