Enable Javscript for better performance
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்: இலவச சட்ட உதவி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்: இலவச சட்ட உதவி முகாம்

    By dn  |   Published on : 14th June 2015 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் சட்ட வட்டப்பணிகள் குழு சார்பில் உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் தினத்தை(ஜூன் 12) முன்னிட்டு அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சட்ட உதவி முகாம் அண்மையில் நடைபெற்றது.

    இம்முகாமுக்கு, அரியலூர் சார்பு நீதிபதியும், சட்ட வட்டப்பணிகள் குழு தலைவருமான நாகராஜன் தலைமை வகித்தார். மேலும், மாணவர்களிடம் குழந்தைத் தொழிலாளர் குறித்த சட்டப் பாதுகாப்பு குறித்து விளக்கிக் கூறினார்.

    பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னத்துரை வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் சேதுமாதவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில், வழக்குரைஞர் சங்கத் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமுக்கான ஏற்பாடுகளை சட்ட வட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai