Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் சாவு: கோட்டாட்சியர் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் சாவு: கோட்டாட்சியர் விசாரணை

    By dn  |   Published on : 14th June 2015 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே திருமணமான 10 மாதத்தில்  இளம்பெண் இறந்தது தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த 27.8.2014 அன்று, அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ஞானப்பிரகாசம் என்பவருக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கூலாபாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் வெண்ணிலா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெண்ணிலா தனது தங்கை தாரணியிடம் தனது மாமியார் நகைகளை கேட்டு தகராறு செய்வதாகக் கூறினாராம்.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வெண்ணிலாவின் தாய் மலர்கொடிக்கு, அவரது மகளின் உடல்நிலை சரியில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வெண்ணிலாவின் பெற்றோர்கள், தங்கள் உறவினர்களுடன் சென்று பார்த்த போது, வெண்ணிலா இறந்த நிலையில் ஒரு கட்டிலில் கிடந்துள்ளார். 

    தனது மகளின் இறப்பில் சந்தேகமடைந்த வெண்ணிலாவின் தந்தை செல்வராஜ் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 10 மாதத்தில் இறந்துள்ளதால்,

    வரதட்சிணை கொடுமையால் உயிரிழந்தாரா என உடையார்பாளையம் கோட்டாட்சியர் ராஜ கோபாலன் விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai