Enable Javscript for better performance
தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

    ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை  துணைக் கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் தொடங்கி வைத்தார். ஜயங்கொண்டம் காவல் நிலையம் முன்பாக தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சிதம்பரம் சாலையில்

    முடிவடைந்தது. இதில், காவல் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், செல்லமுத்து, கணேசன், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் கஸ்பர் மற்றும் ஊர்க்காவல் படையினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai