Enable Javscript for better performance
தா.பழூர் ஒன்றியத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தா.பழூர் ஒன்றியத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருள்கள் பறிமுதல்

    By dn  |   Published on : 14th June 2015 10:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தா.பழூர் ஒன்றியத்தில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான, தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    அரியலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தி காலாவதியான, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி, அரியலூர் மாவட்டம், தா.பழூர், பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வராஜ் தலைமையிலான

    குழுவினர் வெள்ளிக்கிழமை தா.பழூர், அணைக்குடம், ஆகிய பகுதிகளில் மளிகைக்கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ், பான் மசாலா, குட்கா மற்றும் நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்கள், காலாவதியான ஆட்டா, மைதா, கோதுமை, வனஸ்பதி, குளிர்பானங்கள், கலப்பட டீத்தூள், மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் என ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கைப்பற்றினர். பின்னர், வணிகர்களிடம் அலுவலர்கள் கூறியது: பொருட்களில் தயாரிப்புத் தேதி, பாட்ச் எண், காலாவதி தேதி குறிப்பிடாத பொருட்களை கொள்முதல் செய்யவோ, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதோ கூடாது.

    மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai