Enable Javscript for better performance
\\\"ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம்\\\' கோரி முன்னாள் படைவீரர்கள் ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    "ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம்' கோரி முன்னாள் படைவீரர்கள் ஊர்வலம்

    By அரியலூர்,  |   Published on : 15th June 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம் சார்பில் "ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னாள் படைவீரர்களுக்கு ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் என்ற 43 ஆண்டு கால கோரிக்கையை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அரியலூர் ஒற்றுமை திடலிலிருந்து ஊரவலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு மாவட்டத் தலைவர் பீட்டர் தலைமை வகித்தார். இந்தக் கோரிக்கை ஊர்வலம் சத்திரம், தேரடி வழியாக அண்ணா சிலையில் நிறைவடைந்தது.

    பின்னர், முன்னாள் படைவீரர் பொய்யாமொழி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரியலூர், திருமானூர், செந்துறை, ஜயங்கொண்டம், தா.பழூர், ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai