Enable Javscript for better performance
குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து மனிதச் சங்கிலி

    By அரியலூர்  |   Published on : 15th June 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தினத்தை(ஜூன் 12) முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினம் கடந்த 8 ஆம் தேதி முதல் 12 வரை கடைபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களில் சிறுவர், சிறுமிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவ, மாணவிகளின் மனித சங்கிலி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    இதில், பள்ளிக்கு செல்லும் வயதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது, பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முனைய வேண்டும், குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் எனவும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். இதில், தொழிலாளர் நல ஆய்வாளர் சேது மாதவன், பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai