Enable Javscript for better performance
பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்து அதிக லாபம் பெற யோசனை- Dinamani

சுடச்சுட

    

    பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்து அதிக லாபம் பெற யோசனை

    By அரியலூர்,  |   Published on : 15th June 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்றார் மாவட்ட உதவி திட்ட இயக்குநர்(ஊராட்சிகள்) கங்காதாரணி.

    அரியலூர் மாவட்டம்,அஸ்தினாபுரம் ஊராட்சியில் நடப்பாண்டில்(2015 - 16) பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை ஞாயிற்றுக்கிழமை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இதுகுறித்து அவர் கூறும் போது:

    வேளாண்மைத் துறை சார்பில் பண்ணைக்குட்டைகள் அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பின்னர் கிராம ஊராட்சி மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்கள் மூலம் 15 செ.மீ. நீளம் * 15 செ.மீ. அகலம் கொண்ட குட்டை வெட்டப்படும். இதனை அனைத்து விவசாயிகளும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    பின்னர், இதுகுறித்து பண்ணைக்குட்டை அமைத்த விவசாயிகளிடம் கேட்ட போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழைநீரில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு தற்போது மீன்கள் இனப்பெருக்கம் அடைந்து நல்ல பருவத்தை அடைந்துள்ளது. தற்போது, கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, கட்லா போன்ற மீன்கள் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்டு வெளியூர்களில் விற்பனை செய்கிறோம். இதில், எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்றனர்.

    ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் சேகர், ஊராட்சித்தலைவர் ராஜாத்தி சிவகாமி, ஊராட்சிச் செயலர் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai