Enable Javscript for better performance
580 பேருக்கு கட்டுமான உத்தரவு - Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம்,தா.பழூர் ஒன்றியம், இடங்கண்ணி,தென்கச்சி பெருமாள் நத்தத்தில் 580 பேருக்கு தனி நபர் இல்லக்கழிவறை கட்ட ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

    தா.பழூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கான ஆணை வழங்கும் முகாம் மேற்கண்ட ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சாமுவேல் இன்பதுரை தலைமை வகித்து பேசியது: தமிழக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் மூலம் கழிவறை கட்ட வசதி செய்து தரப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் திறந்த வெளியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறை கட்டி பொதுமக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்றார் அவர். இதைத்தொடர்ந்து, தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 பேருக்கும், முன்னதாக இடங்கண்ணி ஊராட்சியில் 280 பேருக்கும் என மொத்தம் 580 பேருக்கு கழிவறை கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai